Pages

Saturday, 4 February 2012


உத்தமியா என கேட்பவனே
நீ யோக்கியனா என சொல்வாயா?
ஊருக்கு ஒருத்தியை வைத்துக்கொண்டு
நீ அடித்திட்ட கூத்தினை சொல்லிடவா?

வேசி என எம்மை அழைத்தவனே
உன் வேசத்தை நானும் கலைத்திடவா?
புலி தோல் போர்த்திய நரியென்று
உண்மையை உலகிற்கு உணர்த்திடவா?

எம் சாதனை பற்றிக் கேட்பவனே
உன் சாதனையை நீ சொல்வாயா?
மங்கையர் மானத்தை விற்பவனே
உன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பாயா?
தவறு நான் செய்தேன் உண்மை
தண்டனை கிடைத்திடல் நன்மை
வேசம் போடு விசமியே
உன் பங்கும் அதிலுண்டு மறவேல்!

எந்த நாயிடத்தும்
நீதி நான் கேட்கவில்லை
குறி உள்ள பெட்டையே
எம் பெண்மையில் உனக்கென்ன சந்தேகம்?
புலி என்று பூச்சாண்டி
எம்மிடமே காட்டிவிட்டாய்
இனி சிங்கத்தின் சீற்றத்தினை
பொறுத்திருந்து பார் நரியே!

1 comment:

  1. உமது கவிதையில் பிழை உள்ளது.
    'ஷ' பதில் 'ச' எழுதப்பட்டுள்ளது.உதரணமாக, வேஷம் விஷமியே

    ReplyDelete