வேலாயுதம் வெற்றி பெறுமா?
நீண்டதொரு இடைவெளிக்குப்பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் விஜய் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புடனும் தீபாவளியன்று வெளிவர இருக்கும் வேலாயுதம் வெற்றி பெறுமா?
நிச்சயமாக முன்னைய விஜய் படங்களை போல் அல்லாது வேலாயுதம் சிறப்பாக வரும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே வந்து ஹிட்டாகிய பாடல்களும், நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வேலாயுதம் ட்றெயிலரும் படம் தோற்கும் என்று கூறிய பலருக்கும் வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பக் பற்றியே பேச்சு. அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம் ட்றெயிலர் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.. அதாவது இந்தளவு ஆக்*ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே.
இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்*ஷன் மட்டுமே காரணமாகாது. குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்*ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருந்தன. அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கப்படாமல் போயின.
வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று பார்த்தால்.. இருக்கலாம் அல்லது வெற்றி பெறலாம். ஆனால் நிச்சயம் ஆக்*ஷன் தோல்விக்கான காரணமாக இருக்கப்போவதில்லை. படத்தின் கதை சிறப்பாக வருமிடத்து நிச்சயம் வேலாயுதம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல். ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனெவே ராஜா கூறியிருந்தார்.
அதனால் கதையும் சிறப்பாக வரும் என்று நம்பலாம். விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்படுமிடத்து வேலாயுதம் பெரிய வெற்றிதான். இன்னொரு விடயம் கில்லியில் கூட பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்களாக இல்லாமல் தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்களால் மாத்திரமன்றி ஏனையவர்களாலும் ஏற்கப்பட்டிருந்தது.
எது எப்படியோ.. வரும் 25 ஆம் திகதி முடிவு தெரிந்துவிடும்
ஆனால் நான் உட்பட ( ஹி ஹி ) விஜய் ரசிகர்களுக்கு வேலாயுதம் மிகப்பெரிய விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் 10 மாதத்திற்கு பின்னர் வரும் விஜய் படம் என்பதாலும், காவலனில் அமைதியான விஜயை பார்த்துவிட்டு அதிரடியான விஜயை பார்க்கப்போவதாலும், நிச்சயமான என் போன்ற விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்துதான்.

No comments:
Post a Comment