jayalalitha madurai meeting, jayalalitha madurai meeting speech, jayalalitha madurai rally, jayalalitha madurai visit, madurai jayalalitha rally speech, vijay speech in cm function, vijay speech controversy, vijay fefsi speech, vijay congress party
ogtrichy.blogspot.com powerd by jeyakirushna
போகிற போக்கில் இந்தம்மா பாட்டுக்கு ஊதி விட்டுட்டாங்க. அது என்னென்ன வில்லங்கத்தை விலைக்கு வாங்கப் போகிறதோ, என்ற கவலையில் இருக்கிறார்கள் தலயும் தளபதியும்.ogtrichy.blogspot.com powerd by jeyakirushna
மதுரை பொதுக்கூட்டத்தில், திரையுலகில் கருணாநிதி குடும்பத்தின் ஆக்கிரமிப்பு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் ஜெயலலிதா. அதோடு நிற்கவில்லை அவர். "திரைப்பட விழா ஒன்றில் தனக்கு எதிராகப் பேசிய ஒரு முன்னணி நடிகரை வீட்டுக்கு வரவழைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டினார் கருணாநிதி" என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, "ஒரு முன்னணி நடிகரை மிரட்டி, தங்கள் குடும்ப நிறுவனங்களுக்கு தொடர்ந்து சினிமா நடித்துக் கொடுக்க வேண்டும், அதுவும் இலவசமாக என்று கருணாநிதி மிரட்டியுள்ளார்" என்றும் கூறினார். அத்தோடு நிற்காமல், "சம்பந்தப்பட்ட நடிகர்கள் தன்னிடம் இதைச் சொல்லி புலம்பியதாக" வேறு கொளுத்திப் போட்டுவிட்டார்.
முன்பு பெப்சி விழாவில் 'மிரட்டிக் கூப்பிடுகிறார்கள்' என்று முதல்வர் முன்னிலையில் பேசியவர் அஜீத். அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பின்னர் கருணாநிதியை சந்தித்து காலில் விழுந்து அஜீத் மன்னிப்பு கேட்டதெல்லாம் நினைவிருக்கலாம்.
இதே அஜீத் பின்னர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதோடு, சிறிது நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதே விஜய்யும் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்று, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததுதான். அதாவது அஜீத்தும், விஜய்யும் ஒரே நாளில் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அவர்களின் அந்த சந்திப்புக்கும், ஜெயலலிதாவின் மதுரை பேச்சுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற கேள்வியோடு ஒரு குறிப்பை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாம் உளவுத்துறை!
No comments:
Post a Comment