'மாற்றான்' படத்தின் மூலம் சூர்யாவின் ஜோடியாகிறார் காஜல் அகர்வால். "கோ' படத்துக்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் "மாற்றான்'. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் "ஏழாம் அறிவு' படத்துக்குப் பின் "மாற்றான்' படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யாவின் ஜோடியாக நடிக்க பல புதுமுகங்களை பரிசீலித்தார் கே.வி.ஆனந்த். அனுஷ்கா, தமன்னா, அமலாபால் உள்ளிட்டவர்களிடம் பேச்சு நடந்தது. இறுதியில் காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. "நான் மகான் அல்ல' படத்துக்குப் பின் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த, காஜல் பாலிவுட்டில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தார். அறிமுக இயக்குநர்களின் குறைந்த பட்ஜெட் படங்களே தேடி வந்ததால், பாலிவுட்டில் எந்த வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை. "மாற்றான்' படத்துக்காக கே.வி.ஆனந்த் அணுக, உடனே சென்னை வந்து கதை கேட்டு சென்றிருக்கிறார்.
No comments:
Post a Comment