Friday, 16 September 2011

அடக்கி வைங்க அபிநயாவை முன்னணி இயக்குனர் முட்டுக்கட்டை (TFC)

அடக்கி வைங்க அபிநயாவை
முன்னணி இயக்குனர் முட்டுக்கட்டை


வெறும் நடிகைகளின் படங்களை போஸ்டர்களில் போட்டுதான் கலெக்ஷன் பார்ப்பார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த வழக்கத்தை எட்டாக கிழித்து எறிந்து விட்டு துட்டு குவித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். இதற்கு உதாரணமாக அமைந்த சமீபத்திய படம் மங்காத்தா. பட போஸ்டர்களிலும் பேப்பர் விளம்பரங்களிலும் அஜீத்தும், அர்ஜுனும் மட்டுமே இருப்பதால் த்ரிஷா, லட்சுமிராய் இருவரும் தங்கள் அரிசிப் பல் உடைகிற அளவுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

இந்த டைப்பில் இன்னொரு செய்தி. 7-ஆம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபிநயா. (அப்ப ஸ்ருதி?) அது இல்லீங்.. இந்த அபிநயா பிளாஷ்பேக்கில் வரும் சரித்திர சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம்.

பட விளம்பரங்கள், பத்திரிகைகளுக்கு அனுப்பும் ஸ்டில்கள் இவைகளில் சூர்யா மட்டும் இருக்கட்டும். அல்லது ஸ்ருதியும் சூர்யாவும் இருக்கும் ஸ்டில்கள் மட்டும் வரட்டும். அபிநயா விஷயத்தை இப்போது காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தாராம் டைரக்டர் முருகதாஸ். அப்படியும் மீறி சில ஸ்டில்கள் வெளிவர, முருகதாஸ் முகத்தில் எள்ளும் கொள்ளும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment