Saturday, 5 November 2011

தள்ளிப் போகும் 'சகுனி' (TFC)

தள்ளிப் போகும் 'சகுனி'

கார்த்தி, ப்ரணீதா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'சகுனி'. ஷங்கர் தயாள் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம்.

கார்த்தி அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருப்பதால் நவம்பர் மாதம் சாலக்குடியில் சுராஜ் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.

இப்படத்தினை தயாரிக்க இருப்பவர் ஞானவேல் ராஜா. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த உடன் 'சகுனி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தினை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கார்த்தி.

இதனால் 'சகுனி' பட வெளியீட்டை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்து இருக்கிறார்கள். பொங்கல் அல்லது குடியரசு தினத்தன்று இப்படம் வெளிவரலாம்.

No comments:

Post a Comment