யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள் போலிருக்கிறது. அட நம்ம பாலாவா....? என கேட்கும்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்திவிட்டார் பாலா. 'அவன் இவன்' படத்தின் எடிட்டிங்கை அதற்குள் முடித்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, அது முடிந்த கையோடு ரெஸ்ட் எடுக்க போய்விடாமல் இன்று டப்பிங்கையும் ஆரம்பித்துவிட்டாராம். இந்த டப்பிங் விஷயத்தை கேள்விப்பட்டு இன்னும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது திரையுலகம். படத்தை ஏப்ரல் பதினான்காம் தேதி திரைக்கு கொண்டு வரும் முயற்சியையும் ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டாராம். பாலாவின் இந்த திடீர் மாற்றம்தான் திரும்பிய இடமெல்லாம் மணமணக்கிறது. பாலா இதுவரை இயக்கிய படங்களில் மிகக் குறுகிய காலத்தில் (ஒரு வருடம்!!) ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது 'அவன் இவன்' படத்துக்காகத்தான் இருக்கும். தேனி உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மட்டுமே இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. வெளிநாடு, வெளிமாநிலம் என எங்கும் செல்லவில்லை. பாலாவின் படங்களிலேயே அதிக சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள படமும் 'அவன் இவனாகத்தான்' இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக ஆர்.கே.-விஷால் மோதும் க்ளைமாக்ஸ் காட்சி இதுவரை தமிழ் சினிமாவிலேயே பார்த்திராத மிக வித்தியாசமான ஆக்ஷன் காட்சி என்கிறார்கள். கடந்த 6-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து இன்று படத்தின் டப்பிங் பணிகள் துவங்குகின்றன. பொதுவாக எடிட்டிங் மற்றும் காட்சிகளின் கோர்வை பற்றி மட்டுமே கவலைப்படுபவர் பாலா. விஷூவல் எஃபெக்ட்ஸ் போன்ற கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் இருக்காது. இந்தப் படமும் அப்படித்தான். எனவே இந்த கோடை விடுமுறையில் மிகச் சிறந்த பொழுது போக்குப் படம் என்று சொல்லும வகையில் வெளியாகிறது 'அவன் இவன்'. அப்போ... டபுள் டிலைட் ஐஸ்க்ரீம்தான்! |
Saturday, 12 February 2011
தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய [TFC]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment