நடுநிசி நாய்கள்' படம் வெளியாவதையொட்டி இயக்குநர் பாரதிராஜாவை பேட்டி கண்டார் கௌதம் மேனன். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நடுநிசி நாய்கள்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. பாரதிராஜாவின் 'சிவப்பு ரோஜாக்களுக்குப்' பிறகு, பக்கா சஸ்பென்ஸ் த்ரில்லரான படம் இதுதான் என்று கூறி வருகிறார் கௌதம் மேனன். எனவே தமிழின் முதல் த்ரில்லரான 'சிவப்பு ரோஜாக்கள்' எடுத்த பாரதிராஜாவை பெருமைப்படுத்தும் வகையிலும், 'நடுநிசி நாய்களுக்கான' விளம்பர நோக்கிலும் நேற்று ஒரு சிறப்பு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பாரதிராஜாவை கௌதம் மேனன் பேட்டி கண்டார். "தமிழின் மிகச் சிறந்த த்ரில்லர் படம் என்றால் அது பாரதிராஜாவின் 'சிவப்பு ரோஜாக்கள்'தான். கிளாஸ்ஸிக் வகை த்ரில்லர் இது. அத்தகைய பெருமைக்குரிய படத்தைத் தந்த பாரதிராஜாவை பேட்டி காண்பதில் பெருமைப்படுகிறேன்", என்றார் கௌதம் மேனன். கௌதம் மேனனின் இயக்கம் மற்றும் படங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாக பதிலுக்கு பாரதிராஜா தெரிவித்தார். உஷாராத்தான் இருக்காரு... நடுநிசிய பாத்ததுக்கப்புறம் சிகப்பு ரோஜாவோட உல்டானு சொல்லிடுவாரேன்னு முந்திக்கிட்டாரே....! |
Saturday, 12 February 2011
பாரதிராஜாவை சந்தித்த கௌதம் மேனன்! [TFC]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment