Saturday, 18 December 2010

விஜய் அரசியலுக்கு வர மாட்டார்-விஜய்யின் தந்தை பேட்டி[TFC]

விரைவில் விஜய் அரசியல் பிரவேசம் செய்வார் என்று கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என செய்திகள் வெளியாகின. மேலும் திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் தன் மகன் அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்துள்ளார். நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை. என்று கூறிய அவர், தனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது... என்று கூறினார். தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்...", என்றார்

No comments:

Post a Comment