Tuesday, 11 January 2011

3 இடியட்ஸ் விஜய் விலகல்-விளையாடிய அரசியல்! [TFC]



விஜய்க்கு இது என்ன நேரமோ? தமிழில் ஷங்கர் ரீமேக் செய்யும் 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் விஜய் இல்லை! விஜய்யின் அரசியல் கூட்டணி யாரோடு? என பரபரப்பு கிளப்பியிருக்கிறது விஜய்யின் சமீபத்திய செய்திகள். 'த்ரீ இடியட்ஸ்' ரீமேக்கில் விஜய் நீக்கப்பட்டாரா? இல்லை விலகிக் கொண்டாரா? அப்படியானால் அதற்கு என்ன காரணம், என்பதே கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் ட...ாக்.

தன் 'காவலன்' படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக நினைக்கிறார் விஜய். ஷங்கரின் 'த்ரீ இடியட்ஸ்' படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டி இருக்கிறார் விஜய். இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.

சரி, விஜய் 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன?. விஜய் அதிமுக அணிக்கு சாதகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் மேலிடத்தை அதிர வைத்திருப்பதால், அவர் நடிக்கும் காவலன் படத்திற்கு எதிரான சில விஷயங்களை செய்யவும் தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது...

அப்படியே டைரக்டர் ஷங்கரையும் அழைத்து கடிந்து கொண்டதாக கிசுகிசுக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் இருக்கக் கூடாது என்று அவர்கள் நிர்பந்தம் செய்ததால் ஷங்கரின் வேண்டுகோளுக்கு இணங்கிதான் விஜய் விலகிக் கொண்டார் என்றும் பேச்சிருக்கிறது.

No comments:

Post a Comment