Monday 7 February 2011

ஆடுகளம் டாப்ஸியும் ஆடிப்போன சினிமா வட் [TFC]

தமிழ்நாடு முழுக்க இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே பாடல் "யாத்தே யாத்தே". டெல்லி மாடல் டாப்ஸி, வந்தவேகத்திலேயே தமிழ்ரசிகர்ளை வசீகரித்துக் கொண்டிருக்கிறார். 

பளீர் தேகமும்.. ஜிலீர் சிரிப்புமாக வளைய வரும் டாப்ஸிக்கு, ஆடுகளம் வெற்றிக்குப் பிறகு வாய்ப்புகள் குவிந்தாலும் கண்களை மூடிக்கொண்டு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையாம். வந்தான் வென்றான் படம் வெளியான பிறகு எனக்கு பெரிய ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பு வரும் என்று சொல்லும் இவருக்கு சுத்தமாக தமிழ்பேசத் தெரியவில்லை. தரமான ஆங்கிலத்தில் தடதடக்கிறார். 

ஆனால் "வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாகலா.." வெயிலுக்கு காட்டாம வளர்த்தாகளா" என்ற இரண்டு வரிகளை வடசென்னை சேட்டு வீட்டுப் பெண் சொல்வது போல் சொல்லும்போது நமக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதை விட சிரிப்பான சங்கதி, சினிமா நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தமிழில் கேள்விகளைக் கேட்க, தனது மேனஜரிடம் கேள்விகளை மொழிபெயர்த்து சொல்லும்படி கேட்டார் டாப்ஸி. மேனேஜரோ எசகுபிசகான கேள்விகளை மாற்றிச் சொல்ல டாப்ஸி சொன்ன பதில்கள் ஒரே காமெடி ரகம். 

சரி ஆங்கிலபத்திரிகை நிருபர்களாவது கொஞ்சம் ஒழுங்காகக் கேட்பார்கள் என்பார்த்தால், ஒருவர் � உங்கள் பள்ளி வாழ்கையில் எத்தனை பேர் உங்களை புரபோஸ் பண்ணினார்கள்?� என்று கேட்க� அதற்கு டாப்ஸியும் கிண்டலாக � ஐயோ! கவுண்ட் பண்ணாமல் விட்டுட்டனே � என்றார். ஒருவழியாக பொறுமை காத்து பெரும்பான்மை நிருபர்கள் வெளியேறியதும் நம்ம பேட்டியை ஆரம்பித்தோம். 

இப்போ கோலிவுட்டின் ஹாட் கேக்குன்னு சொல்லப்படுற தமன்னாவை கூட நான்கு படங்களுக்கு பிறகுதான் ரசிகர்கள் ரெக்ககனைஸ் பண்ணாங்க. உங்களை ஒரே படதுத்துலயே ஏத்துக் வேச்சுட்டீங்களே எப்படி? 

தாங்கஸ் ஃபார் யூவர் காம்ப்ளிமேன்ட்! பட் ஹன்ஸிகா மொத்வானி நடிச்சு இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல. ஆனா அதுக்குள்ள அவங்க ஃபோர் மூவீஸ்ல நடிக்கிறாங்க. அப்படிப்பார்த்தா நான் நத்திங். ஹன்ஸிகா, தமன்னா, ஸ்ரேயா, த்ரிஷா இவங்க கூட கம்பேர் பண்ணினா நான் கிண்டர் கார்டன்! ஒரே படத்துல பாப்புலர்ன்னு சொல்றீங்க. ஆல் கிரடிட்ஸ் கோஸ் டூ வெற்றி மாறன் சார்! அவர் என்னோட போட்டோவப் பார்த்து சூர் பண்ணலன்னா திஸ் இஸ் நாட் ஹாப்பண்ட்! 'யதார்த்தமான கதைகளில் நடிக்கும்போதுதான் நம் திறமையை நிரூபிக்க முடியும். அப்படியொரு வாய்ப்பு கிடைச்சதுல ஐ ய ஹாப்பி. 

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷாட் எப்படியிருந்தது ஆடுகளத்துல? 

அய்ய்யோ! அதை ஏன் ஞாபகப்படுதுறீங்க? எங்கயோ டெல்லியில வளர்ந்த என்னை கொண்டு வந்து திடீர்ன்னு மதுரையில விட்டுட்டாங்க. என்னைச் சுத்தி ஒரு ரெண்டாயிரம் பேர் நிக்கிறாங்க. ஒரே சத்தம். தனுஷைப் பார்த்து நான் இங்லீஷ், மதுரை ஸ்லாங் இரண்டையும் கலந்து பேசனும். கை கால் உதற ஆரம்பிச்சுடுச்சி. கூட்டத்தை க்ளியர் பண்ண எவ்வளவோ டிரைப்பண்ணாங்க. ம்ஹூம் ! டைரக்டரையே முறைகறாங்க. நான் நடுங்கி போயிட்டேன். சரி போலீஸாவது கண்ட்ரோல் பண்ணுவாங்கன்னா� போலீஸூம் வேடிக்கை பார்க்கிறாங்க. பத்துமுறைக்கு மேலே ரிகர்சல் பார்த்தும், பிப்டீன் டைம்ஸ் ரீடேக் வாங்கினேன். அப்புறம் போர்த் டே சூட்டிங்லேர்ந்து ரொம்ப கூலாயிட்டேன்.

இப்போ படம் வெளியான பிறகு ரசிகர்கள் உங்களை அடையாளம் கண்டுகிறாங்களா? 

என்ன இப்படி கேட்டுட்டிங்க! சென்னையில வந்தான் வென்றான் செகண்ட் ஷெட்யூல்

No comments:

Post a Comment