
வெகு வேகமாக வளர்ந்து வருகிறது கார்த்தி நடிக்கும் சகுனி படம். பொதுவாகவே அரசியல் தொடர்பான வசனங்களை பேசவும், அப்படி பேசி நடிக்கவும் தயங்கும் நடிகர்களுக்கு மத்தியில் கார்த்தி எதற்கு இந்த படத்தை ஒப்புக் கொண்டார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
ஆனால் இந்த படத்தில் தனக்கே உரிய நக்கல் நையாண்டி வசனங்கள் அதிகம் இருப்பதால்தான் குஷியானாராம் கார்த்தி. இவரது போர்ஷன் நீரா ராடியாவை நினைவுபடுத்தினாலும், இவரைப் போலவே அரசியல் காமெடிகளை அலசி காயப்போட மேலும் இருவர் படத்திலிருக்கிறார்கள்.
மாநகராட்சி கவுன்சிலர் வேடத்தில் நடித்திருக்கும் ரோஜா, ராதிகா இருவரும் நாட்டு நடப்பை அப்படியே பேசி கலக்கி இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment