வேற்றுக் கிரக வாசிகளை சாதாரண மக்களாலும் அடையாளம் காண முடியும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எமது பூமிக்கு அப்பால் வேறு உலக வாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வானியல் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.
பூமியில் பலரும் இதனை கண்டதாகவும் நிரூபிக்கப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பூமியை நோக்கி வரும் வேற்றுக் கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் காணலாம் என்பது பற்றி வானியல் விஞ்ஞானிகள் இலகுவான வழிமுறை ஒன்றை கூறுகின்றனர்.
அதாவது வெளி உலகில் இருந்து வரும் போது அவர்களின் வாகனத்தின் ஒளி எமது கண்ணுக்கு தெரியும்.
செயற்கையாக வரும் ஒளியைக் கொண்டு இவை வெளி உலகில் வருபவர்களின் அடையாளம் என்பதனை தெரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.
தூரத்துக்கு ஏற்றவாறு பொருட்களின் ஒளி மாறுபடும். எனவே நிலையான ஒளியையும், செயற்கையாக வரும் ஒளியையும் இலகுவாக கண்டு கொள்ளலாம் என பௌதிக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment