2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சிறையில் 9 மாதத்தை நிறைவு செய்துள்ளார்.
இதே வழக்கில் கைதான கனிமொழி தொடர்ந்து ஜாமீன் கோரி வந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட விடுதலை கோரி அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அத்துறையின் அமைச்சராக இருந்த அ.ராசா கடந்த பிப்ரவரி 2ம் தேதி கைது செய்யப்பட்டார். நவம்பர் 2-ம் தேதியோடு அவர் 9 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார்.
இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கனிமொழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 22ம் தேதி இவர்கள் அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலானது.
இவர்களில் ராசா இதுவரை ஜாமீன் கோரி ஒரு முறை கூட மனு செய்யவில்லை. மாறாக, கனிமொழி, ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர். கே. சண்டோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் ஊக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார், குசேகாவோன் காய்கறி, பழங்கள் விற்பனை நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கறீம் மொரானி, யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, டி.பி. ரியால்டி நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் நிர்வாகிகள் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜாமீன் கோரி மனுச் செய்தனர்.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அனைத்திலுமே ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தும் யாரும் இதுவரை விடுதலை பெற முடியவில்லை.
ஆனால் ராசா இதுவரை ஒருமுறை கூட ஜாமீன் மனு தாக்கல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராசா சிறையில் 9 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment