Sunday 6 November 2011

சென்னையில் மருத்துவ தாதியர்களாக 3 இலட்சம் பாடசாலை மாணவர்கள் (TFC)


சென்னையில் 3 இலட்சம் பாடசாலை மாணவர்கள், மருத்துவ தாதியர்களாக சேவையாற்ற உள்ளனர்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை, இதற்கு ஏற்பாடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மழைக் காலத்தில் பரவும் தொற்று நோய்களைத் தடுப்பதற்காகவே பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார திட்டத்தை, சென்னை மாநகராட்சி ஆரம்பிக்க உள்ளது.
இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மாநகராட்சி சுகாதாரக் குழுவினரால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நுளப்புகளினால் ஏற்படும் நோய்கள், அதைத் தடுக்கும் வழிகள் குறித்த கருத்தருங்குகளை நடத்த உள்ளனர்.
இதன் பின்னர் மாணவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்து தொற்று நோய் தடுப்பு முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களும், விளக்கக் குறிப்புகளும் அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இதனடிப்படையில் இந்த மாணவர்கள் ஒவ்வொரு பிரதேசங்களாச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர்.
இத்திட்டம் சென்னை, கீழ்ப்பாக்கம் கோல சரஸ்வதி பாடசாலையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவருக்கும் மருத்துவ தாதியர் அடையாள அட்டை வழங்கப்படும் என மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் 3 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்ற அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அட்டையில், என் வீட்டிற்கும், தெருவுக்கும் நான் ஒரு மருத்துவ தூதன் நுளம்புகளை ஒழிப்போம், டெங்கு, சிக்குன் குனியாவை தடுப்போம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
எல்லா மாநகராட்சி சுகாதார மையங்களிலும், தேவையான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதுடன் புகை அடிப்பது உள்ளிட்ட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நுளம்புத் தொல்லை, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், இலவச தொலைபேசி எண் 1913 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment