Sunday, 6 November 2011

பெற்ரோல் விலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டும் (TFC)


சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணராமல் மத்திய அரசாங்கம் பெற்ரோல் விலையை உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எதிராக, பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பா.ஜ. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
இந்த உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.மு. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை, பொதுமக்கள் செலுத்தக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசாங்கம் நள்ளிரவில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளமையினால் இதை நள்ளிரவு படுகொலை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரிக்காத சூழலில்இ பெற்ரோல் விலையை உயர்த்தியது தவறான நடவடிக்கை என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment