Saturday 29 January 2011

விஜயுடன் நேரடியாக மோதுவது சிம்பு [TFC]


http://hindia.in/tamilcinema/wp-content/uploads/2011/01/ajith-simbu-vijay.jpg
ஒரு வருடத்துக்கு எத்தனை படங்களில் நடிப்பது என்பதில் விஜய், விஷால், சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா இடையே இப்போது கடும்போட்டி நிலவி வருகிறது
கோடம்பாக்கத்தில். ஆனாலும் விஜயும், தனுஷும் மட்டும்தான் வருடத்துக்கு குறைந்தது மூன்று படங்களிலாவது நடித்து விடவேண்டும் என்பதில் குறியாக
இருகிறார்கள். முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், சித்திரைத் திருநாள் ஆகியவற்றுக்கு கட்டாயாம் தனது படம் ரிலிஸ் ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டி தனது ரசிகர்களுக்கு விருந்து படத்து வருபவர் இளைய தளபதி விஜய்.


எத்தனை தோல்விகள் கொடுத்தாலும் 40 முதல் 50 கோடிக்கு விஜய் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய் இன்னும் தொடரவே செய்கிறார். அப்படிப்பட்ட விஜயுடன் நேரடியாக மோதுவது என்றும், விஜய் இடத்தை பிடித்து, இடத்துக்கு தள்ளுவது என்றும் முடிவு செய்திருகிறாராம் சிம்பு. இதன்முதல்கட்டமாக விஜயை எல்லாமுனைகளிலும் எதிர்கொள்ள தயாராகிவிட்டாராம் சிம்பு. அதன் முதல் கட்டம்தான் மூன்று முட்டாள்கள் சர்ச்சையை
கிளப்பி, விஜய் அல்லது அவரது அப்பா எஸ்.ஏ.சி யினை மடக்க நினைத்தது என்கிறார்கள் சிம்பு நட்பு

விஜயை வாயை சிம்பு பிடிக்க வட்டத்தில் இப்போது அடுத்த கட்ட தாக்குதலுக்காக விஜய் படத்தோடு இனி களமிரங்க வேண்டும் என்று
திட்டமிட்டிருக்கிறாராம் சிம்பு. இந்த பலப்பரிச்சை விவகாரம் பற்றி கேள்விப்பட்ட சரத்குமார், விஜயுடன் மோத வேண்டாம் என்று அறிவுரை செய்ய, “ இது ரேஸ் சார்! ஜெயிக்கனும்னா மோதிதான் ஆகனும்” என்று கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சொல்லிவிட்டாராம். இதானல் தனது வானம் படத்தை பொங்கல் வெளியிடாகவும், போடா போடியை சித்திரை வெளியீடாகவும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறாம் சிம்பு.

தனது படங்களும் சம்மர் ஒவ்வொரு ஆண்டும் எந்த ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, விஜய் படம் கட்டாயம் ரிலீஸ் ஆகிவிடும். காவலன் படத்தை தீபாவளில் வெளியீடாகவும், வேலாயுதம் படத்தை பொங்கல் வெளியீடாகவும் கொண்டு வரும் விஜய், சித்திரை மற்றும் கோடை வெளியீடாக பகலவன் படத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்திருகிறார் என்கிறார்கள்.

இப்போது பகலவனுக்குப் போட்டியாக தனது வாலிபனை அடுத்த ஆண்டு கோடை ரிலீஸாக களமிரக்க முடிவு செய்து பிரி புரடெக்*ஷன் வேலைகளை முடுக்கி
விட்டிருகிறாராம் சிம்பு. வாலிபன் படத்தின் திரைக்கதையை பக்காவாக எழுதி முடிக்க இரண்டுபேரை கோஸ்ட் ரைட்டர்களாக நியமித்திருகிறாராம். மிக முக்கியமாக வாலிபன் படத்துக்கு யுவனிடம் முன்னதாகவே டுயூன்களை கேட்டிருகிறாராம் சிம்பு. இதைவிட அசத்தலான செய்தி வாலிபன் படத்தில்
சோனம் கபூரை தமிழுக்கு அறிமுகம் செய்கிறாராம் சிம்பு. அப்படிபோடு! சிம்பு வைக்கிற ஒவ்வோரு அடியும் ரொம்ப ரகசியமா இருக்கே!

இதைவிட அசத்தலான செய்தி -

வெங்கட் பிரபு இயக்கத்தில் "கோவா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்பு. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "மங்காத்தா'வில் கெஸ்ட் ரோலில் வரப் போகிறாராம். அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு இந்த வாய்ப்பை அஜீத்திடமே நேரில் கேட்க, பார்க்கலாம் என்ற அஜீத் ஒரு அதிகாலையில் சிம்புவை போனில் அழைத்து "நடி தம்பி' என்று சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment